வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் கனமழை இரவு முழுவதும் கொட்டி தீர்த்த நிலையில், மாநகராட்சியின் தீவிர நடவடிக்கையால் தேங்கியிருந்த மழைநீர் அதிவேக ராட்சத பம்புகள் மூலம் விரைவாக வெளியேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து, பாதுகாப்பு கருதி மூடப்பட்டிருந்த அனைத்து சுரங்கப்பாதைகளும் இன்று (அக்.18) காலை 6 மணிக்கே முழுமையாக போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்டன. தொடர் கண்காணிப்பு மற்றும் விரைவான நீரிறக்க பணிகள் காரணமாக நகரில் இயல்பு வாழ்க்கை விரைவாக திரும்பி போக்குவரத்து சீரடைந்துள்ளது.