பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைவருக்கும் கிடைத்தும் வகையில் நாளை (ஜன.10) அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2,20,94,585 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு நீள முழு கரும்பு ஆகியவை வழங்கப்படுகிறது.