கர்நாடக முதலமைச்சர், பிரதமர் முன்னிலையில் மேகதாது அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது என்று பேசியதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் முக்கிய உரிமையான காவிரி விவகாரத்தில், இனியும் அமைதி காக்காமல் தமிழக அரசு உடனடியாகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். நதிநீர் பகிர்வு மற்றும் அணை கட்டுவது தொடர்பான இந்த விவகாரத்தில் அரசு உரிய பதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
நன்றி: Pttv