அல்காரஸ் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்

தோஹாவில் நடைபெற்று வரும் கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில், ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் பிரான்ஸ் வீரர் ஆர்தர் ரின்டெர்னெக்கை வீழ்த்தி வெற்றி பெற்றார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 6-4, 7-6 என்ற செட் கணக்கில் வென்ற அல்காரஸ், அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். உலகின் முன்னணி வீரர்கள் கலந்துகொண்டுள்ள இத்தொடரில், அல்காரஸின் இந்த அதிரடி தொடக்கம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி