அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டதாக்க கைது செய்யப்பட்ட 57 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2017 ஜனவரியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்றபோது போலீசார் தடியடி நடத்தினர். இதனைக் கண்டித்து அலங்காநல்லூர் மற்றும் மெரினாவில் போராட்டங்கள் தீவிரமடைந்தன. போராட்டத்தில் ஈடுபட்ட 63 பேர் கைது செய்யப்பட்டு, சிபிசிஐடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.