அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: அண்ணாமலையின் காளை வெற்றி பெற்று சாதனை

மதுரை அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் காளை வெற்றி வாகை சூடியது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த அண்ணாமலையின் காளையை மாடுபிடி வீரர்கள் அடக்காததால், அந்த காளை வெற்றி பெற்றதாக விழாக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. வீரர்களுக்கு பிடி கொடுக்காமல் களத்தில் நின்று விளையாடிய அந்த காளைக்கு, பரிசாக மெத்தை வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி