அழகர் கோயில்: காப்பு கட்டிக் கொண்ட பக்தர்கள்

முருகப்பெருமானின் 6வது படை வீடான சோலைமலை முருகன் கோயில் அழகர் மலை உச்சியில் உள்ளது. நேற்று (நவ., 2) காலையில் கோயிலில் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். இதில் முன்னதாக சுவாமிக்கு சண்முகா அர்ச்சனையும், யாகசாலை பூஜைகளும், மகா அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து அன்ன வாகனத்தில் மேளதாளங்கள் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. 7ஆம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி