நாளை காலை நடைபெறும் அஜித்குமார் தாயாரின் இறுதிச் சடங்கு

நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி (85) வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (மே 30) காலமானார். அவரது இறுதிச் சடங்கு நாளை காலை 8.30 மணிக்கு பெசன்ட் நகர் மயானத்தில் நடைபெறவுள்ளது. ‘இந்த இறுதிச் சடங்கு தனிப்பட்ட நிகழ்வாக நடைபெறும்’ என அஜித் குமாரின் குடும்பம் தெரிவித்துள்ளது. மேலும், துபாயில் உள்ள நடிகர் அஜித் இன்று (மே.30) மாலை சென்னை வருகிறார். 

நன்றி: PT

தொடர்புடைய செய்தி