சிவகங்கை மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரின் மரணம் விவகாரத்தின் தீர்ப்பு குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “அஜித்குமார் மீது நிகிதா அளித்த புகாரில் உண்மையில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (பிப்.5) சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அப்பாவி ஒருவரைக் காவலர்கள் அடித்துக் கொலை செய்துவிட்டதாக நீதிபதிகள் காட்டம் தெரிவித்துள்ளனர். ஏழை மக்களை பலிகொடுக்கும் திமுகவின் காட்டாட்சி விரட்டியடிக்கப்படும்” என்றார்.