சிவகங்கை திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல் மரண வழக்கில், நீதிபதி ஜான் சுந்தர்லால் நடத்தி வந்த விசாரணை நிறைவடைந்துள்ளது. நேற்று நீதிபதி, திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நேரில் வருகை தந்து, டி.எஸ்.பி, ஏ.டி.எஸ்.பி, காவல் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் நேரில் விசாரணை நடத்தினார். அப்போது, நிகிதா அளித்த புகார் நேரில் கொடுக்கப்பட்டதா? அல்லது தொலைபேசி வாயிலாக தெரிவிக்கப்பட்டதா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளார். நாளை நீதிபதி அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது.