திருநெல்வேலி மாவட்டத்தில் நடிகர் அஜித் குமாரின் 200 அடி கட் அவுட் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜித் நடித்துள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் வருகிற 10-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், PSS மல்டி ப்ளக்ஸ் திரையரங்கத்தில், அஜித் குமார் ரசிகர் மன்றம் சார்பாக வைக்கப்பட்ட கட் அவுட் திடீரென சரிந்து விபத்துக்குள்ளானது. இதில், நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.