அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் விரைவில் விவாகரத்து செய்து கொள்ள இருப்பதாக பரவலாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இந்நிலையில், மும்பையில் நடந்த பிரம்மாண்டமான விருந்து நிகழ்ச்சி ஒன்றில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் இணைந்து ஒன்றாக கலந்து கொண்டனர். அந்நிகழ்ச்சியில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.