தமிழகத்தில் சென்னை, தஞ்சை, திருப்பூர் உள்ளிட்ட சில இடங்களில் ஏர்டெல் தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதன்படி பல செல்போன்களில் ஏர்டெல் சிக்னல் கிடைக்காததால் வாடிக்கையாளர்கள் கால் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். இது தொடர்பாக பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த பிரச்சனை விரைவில் சரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.