ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி, செப்டம்பர் 2025-ல் முடிவடைந்த இரண்டாம் காலாண்டில் ₹11.8 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இந்தக் காலாண்டில் வங்கியின் வருவாய், கடந்த ஆண்டைவிட 19.4% வளர்ச்சியைக் கண்டு, முதல் முறையாக ₹804 கோடியைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. இந்தச் சாதனை, வாடிக்கையாளர்கள் வங்கி மீது வைத்துள்ள நம்பிக்கையைப் பிரதிபலிப்பதாக நிர்வாக இயக்குநர் அனுப்ரதா பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார்.