விமான கட்டண உச்ச வரம்பு நீக்கம்.. நாளை முதல் புதிய நடைமுறை அமல்

மத்திய அரசின் புதிய அறிவிப்பின்படி, உள்நாட்டு விமான கட்டணங்களுக்கான தற்காலிக உச்ச வரம்பு நாளை (மார்ச் 23) முதல் முழுமையாக நீக்கப்படுகிறது. மேற்காசிய போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில் விமான எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதை கருத்தில் கொண்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தினால் விமான நிறுவனங்கள் தங்களின் இயக்க செலவுகளுக்கு ஏற்ப கட்டணங்களை நிர்ணயிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் பயண கட்டண உயர்வை சந்திக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி