ஆஸ்திரேலியாவின் ஏர்டிரங்க் நிறுவனம், அமெரிக்காவின் பிளாக்ஸ்டோன் முதலீட்டு நிறுவனத்தின் உதவியுடன் இந்தியாவின் மிகப்பெரிய தரவு மையத்தை மும்பையில் அமைக்கவுள்ளது. சுமார் ரூ.2 லட்சம் கோடி முதலீட்டில், 3 கிகாவாட் (GW) திறன் கொண்டதாக இந்த அதிநவீன மையம் உருவாக்கப்பட இருக்கிறது. ஏற்கனவே ஹாங்காங், ஜப்பான், மலேசியா ஆகிய நாடுகளில் தரவு மையங்களை கொண்டுள்ள இந்நிறுவனம், தற்போது இதன் மூலம் இந்திய டிஜிட்டல் சந்தையில் தடம் பதிக்கிறது.