நைஜீரியாவில் 27,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானத்தின் இடது பக்க எஞ்சின் திடீரென வெடித்து சேதமடைந்தது. லாகோஸிலிருந்து புறப்பட்ட இந்த விமானத்தை, விமானிகள் அவசரமாக பெனின் சிட்டி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கினர். விமானத்தில் இருந்த 80 பயணிகளும் உயிர் தப்பினர். சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.