தமிழ்நாடு முழுவதும் இன்று (ஜன.14) போகி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதிகாலையில் பழைய பொருட்களை எரித்ததால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் காற்றின் தரம் பெருமளவு குறைந்துள்ளது. குறிப்பாக, கும்மிடிபூண்டியில் காற்றின் தரக் குறியீடு (AQI) அதிகபட்சமாக 196 ஆகவும், மணலியில் 144 ஆகவும் பதிவாகி ஆரோக்கியமற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நன்றி:News18