அகமதாபாத்தில் இருந்து இன்று (ஜூன் 12) லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தின் அனைத்து ரக விமானங்களின் வயது, தற்போதைய செயல்திறன் உள்ளிட்ட தகவல்களின் நிலை அறிக்கையை வழங்க ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.