டெல்லியில் இருந்து கனடா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் (AI185), உரிய அனுமதி பெறாத 'போயிங் 777-200LR' ரகத்தைச் சேர்ந்தது என 4 மணி நேரம் கழித்து சீனா வான்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக விமானம் டெல்லிக்கு திருப்பி விடப்பட்டதால், சுமார் 9 மணி நேரம் பயணித்த பயணிகள் மீண்டும் டெல்லிக்கே திரும்பினர். அனுமதியின்றி விமானத்தை ஏர் இந்தியா இயக்கியது எப்படி எனப் பெரும் கேள்விகள் எழுந்துள்ளன.