லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மும்பை திரும்பியது

மும்பையிலிருந்து இன்று காலை 5:39 மணிக்கு லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மும்பை விமான நிலையத்திற்குத் திரும்பியது. சிறிது நேரம் பறந்த பிறகு விமானம் திரும்பக் கொண்டுவரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர் அதிகரித்து வருவதால், வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக விமானம் திரும்பி வந்துள்ளது. மேலும் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு உடனடியாக சரியான முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி