இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான விமான சேவையை மீண்டும் தொடங்க ஏர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி, வரும் 2026 பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமானங்களை இயக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த சேவை மீண்டும் தொடங்க உள்ளதால், இரு நாட்டு பயணிகள் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.