குஜராத்: அகமதாபாத்தில் இருந்து 242 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் விபத்தில் சிக்கியது. இது விபத்தா அல்லது சதியா என கேள்வியெழுந்த நிலையில் விபத்துதான் என்று ‘ஏர் இந்தியா’ தெரிவித்துள்ளது. "அகமதாபாத்திலிருந்து லண்டன் கேட்விக் செல்லும் AI171 விமானம், புறப்பட்ட பிறகு இன்று விபத்தில் சிக்கியதை ஏர் இந்தியா உறுதிப்படுத்துகிறது. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள்" என கூறப்பட்டுள்ளது.