காங்கோ பயணியால் கனடாவுக்கு திருப்பி விடப்பட்ட ஏர் பிரான்ஸ் விமானம்

காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், அந்நாட்டிலிருந்து அமெரிக்கா வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. காங்கோ நாட்டினர் வாஷிங்டன் விமான நிலையம் வழியாக மட்டுமே அமெரிக்கா நுழைய முடியும் என்ற விதி உள்ள நிலையில், பிரான்ஸின் பாரிசில் இருந்து அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்திற்கு புறப்பட்ட ஏர் பிரான்ஸ் விமானத்தில் காங்கோவைச் சேர்ந்த பயணியும் இருந்துள்ளார். இதனால், மிச்சிகன் மாகாணத்தில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்ட விமானம் கனடாவின் மாண்ட்ரியலுக்கு திருப்பி விடப்பட்டது.

தொடர்புடைய செய்தி