உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் சதம் அடித்த 3-வது வீரர் என்ற சாதனையை தென் ஆப்பிரிக்காவின் எய்டன் மார்க்ரம் படைத்துள்ளார். லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் இறுதிப்போட்டியில் வெற்றி பெற தென் ஆப்பிரிக்காவுக்கு 282 ரன்களை இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்தது. இதையடுத்து, 2-வது இன்னிங்ஸில் நிதானமாக ஆடிய மார்க்ரம், தனது 8-வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் ஐசிசி தொடரின் இறுதிப்போட்டியில் சதம் அடித்த முதல் தென்.ஆப் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
நன்றி: ICC