நாளை சுற்றுப்பயணத்தை தொடங்கும் அதிமுக

நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு நாளை மாநிலம் முழுவதும் சுற்று பயணத்தை தொடங்க உள்ளது. இது குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நாளை முதல் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் சுற்றுப் பயணம் தொடங்குகிறது. வெளிநாடு வாழ் தமிழர்களும் தங்கள் கருத்துக்களை இமெயில் அல்லது கொரியர் மூலம் அதிமுக தலைமை கழகத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனைத்து பகுதிகளுக்கும் 10 பேர் கொண்ட குழு நேரில் சென்று கருத்துகளை கேட்டு பெறும். கருத்து தெரிவிப்பவர்கள் எழுத்துப்பூர்வமாக தங்கள் கருத்துக்களை தெரிவித்தால் இன்னும் நலமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி