கோவை குனியமுத்தூரில் 1969-ல் பிறந்த எஸ்.பி. வேலுமணி, 2001-ல் நகர்மன்றத் தலைவராக அரசியல் வாழ்வைத் தொடங்கினார். பேரூர் மற்றும் தொண்டாமுத்தூர் தொகுதிகளில் 4 முறை எம்.எல்.ஏ-வாக வென்ற இவர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவைகளில் நகராட்சி நிர்வாகம், தொழில்துறை உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை வகித்தார். அதிமுக தலைமை நிலையச் செயலாளராகவும், கொங்கு மண்டலத்தின் செல்வாக்குமிக்க முகமாகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.