தவெகவை ஆதரிக்க வேண்டும் என்ற மனநிலை அதிமுகவில் உருவாகியுள்ளதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன் தெரிவித்துள்ளார். தேசிய ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர், பந்து இப்போது விஜய்யின் கையில் உள்ளது. அதிமுகவில் விஜய்யை ஆதரிப்பது குறித்து எந்த முரண்பாடும் இல்லை என கூறியுள்ளார். 108 இடங்களில் வென்றுள்ள தவெக, பெரும்பான்மைக்கு தேவையான மீதமுள்ள 11 இடங்களை பெற காங்கிரஸ், விசிக, சிபிஐ உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை கோரியுள்ளதாக கூறப்படுகிறது.