சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்டிருந்த பிளவு முடிவுக்கு வந்துள்ளது. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மன்னிப்பு கடிதம் வழங்கினர். இதன் விளைவாக, இரு தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர். சபாநாயகரிடம் கொறடா விவகாரம் தொடர்பாக கொடுத்திருந்த கடிதத்தையும் திரும்பப் பெற்றுள்ளனர். தவெக அரசுக்கு அளித்த ஆதரவையும் வாபஸ் பெற்றனர். இதனால் தவெக அரசுக்கு தற்போது 120 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே உள்ளது.