அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்தது ஏற்புடையதல்ல: பெ.சண்முகம்

எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தது ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல என்று சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்தது எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் நடந்ததாக கருத முடியவில்லை என கூறியுள்ளார். சிபிஎம் கட்சியின் 2 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவளித்துள்ள நிலையில், தவெகவுக்கு படையெடுக்கும் அதிமுகவினரின் வருகை பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

தொடர்புடைய செய்தி