கும்மிடிப்பூண்டியில் 2005-ம் ஆண்டு அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய பவாரியா கொள்ளையர்களுக்கு இன்று (நவ.24) சென்னை சிறப்பு நீதிமன்றம் தண்டனை விவரத்தை அறிவித்துள்ளது. இந்த வழக்கில் கடந்த வாரம் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகிய 3 பேருக்கும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதேசமயம், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஜெயில்தார் சிங்கை நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.
நன்றி:News18Tamil