ராஜினாமா கடிதம் முறையாக இருந்தால் மட்டுமே ஏற்பேன் என்றும், தனது முடிவை அறிவிக்கக் கால நிர்ணயம் செய்ய முடியாது என்றும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார். மேலும், 3 எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமாவுக்கு எதிரான இபிஎஸ்-ஸின் மனு குறித்துப் பின்னர் விளக்கம் அளிக்கப்படும் என்றும், இதில் தனது முடிவே இறுதியானது என்றும் கூறினார். சட்டப்பேரவை விதிகளுக்கு உட்பட்டே தான் செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.