அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்-க்கு எதிராக தலைமை செயலகத்தில் இன்று (மே.27) கொடுத்த மனுக்களை எஸ்.பி.வேலுமணி தரப்பு வாபஸ் பெற்றனர். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி.வேலுமணி, “எங்களுக்குள் கருத்து வேறுபாடு தான் இருந்தது. இபிஎஸ் தான் எங்கள் பொதுச்செயலாளர். இபிஎஸ்ஸிடம் சில கோரிக்கைகளை வைத்து இருந்தோம். எங்களுக்குள் பிளவு இல்லை, கருத்து வேறுபாடு தான். அதிமுகவில் கருத்து வேறுபாடு நீங்கிவிட்டது. அதிமுக தற்போது ஒற்றுமையாக உள்ளது" என்றார்.
நன்றி: பாலிமர்