அண்ணா பல்கலை., விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து திமுக மீது விமர்சனம் தெரிவித்து வருகிறார். இந்நிலையில், “பாலியல் குற்றாவாளி சார்களின் சரணாலயம் அதிமுக தான்” என அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது, “பொள்ளாச்சி தொடங்கி, ராமேஸ்வரம் குளியலறை கேமரா, அண்ணா நகர் சிறுமி வழக்கு வரை அதிமுகச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாலியல் குற்றாவாளி ‘சார்களின்’ சரணாலயம் அதிமுக என்பது, மீண்டும் ஒருமுறை அம்பலமாகி இருக்கிறது” என்றார்.