கட்சிக்குள் எவ்வளவு சிக்கல்கள் வந்தாலும் எல்லவற்றையும் கடந்து தேர்தலை நோக்கி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னோக்கி செல்வதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். 150 இடங்களில் அதிமுக போட்டியிடுவதற்கு பங்கம் வராமல் இருக்க வேண்டும் என்றும் பாமக, தேமுதிகவை சரிகட்டும் முயற்சியில் முழு கவனம் செலுத்தினாலே போதுமானது என்றும் கூறுகின்றனர். நம்பிக்கையுடன் அதிமுக களமிறங்கினால் நிச்சயம் 80-90 இடங்களில் வெற்றி உறுதி என்கின்றனர்.