அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா, மைத்ரேயன், மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜா உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தனர். முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தையும் திமுகவில் சேர்ப்பதற்கான முயற்சி நடந்து வருவதாக கூறப்படுகிறது. இவர்கள் இணைந்தது மேலும் பலத்தை கூட்டினாலும், திமுக அமைச்சர்களுக்கு பெரிய சவாலாகவே அமைந்துள்ளது. ஏற்கனவே அதிமுகவிலிருந்து திமுகவிற்கு வந்தவர்கள் முக்கிய அமைச்சர்களாக மாறியுள்ளதால், புதியவர்களுக்கும் சீட் ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.