மதுரையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் அதிமுக நிர்வாகி செந்தில்குமார் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் அவரது மனைவி காவியா கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்காதலன் கார்த்திக் உள்ளிட்ட 3 பேர் போலீசில் சரண் அடைந்தனர். மனைவியின் கள்ளத்தொடர்பை கண்டித்ததால், கார்த்திக்குடன் சேர்ந்து திட்டமிட்டு செந்தில்குமாரை அரிவாளால் வெட்டி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.