முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, இபிஎஸ் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. ஹாட் பாக்ஸ் மற்றும் எவர்சில்வர் தட்டுகளை வீடு வீடாக சென்று அதிமுக நிர்வாகிகள் வழங்கி வருகின்றனர். இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் தோல்வி பயத்தின் காரணமாக இந்த பரிசுப் பொருட்களை அதிமுகவினர் வழங்கி வருவதாக விமர்சித்து வருகின்றனர்.