தவெக அமைச்சரவையில் எஸ்.பி.வேலுமணி தரப்பின் 25 அதிமுக எம்எல்ஏக்களுக்கு இடம் மறுக்கப்பட்டதால், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரும்பிய எம்எல்ஏக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். ஆட்சியில் இடம் கிடைக்கும் என்ற கனவு தகர்ந்ததால், அவர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி பக்கம் சாய்வது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவில் அதிருப்தி அணியில் இருந்த எம்எல்ஏக்கள் விரைவில் எடப்பாடி பழனிசாமியின் பக்கம் தாவுவார்கள் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.