தமிழ்நாடு யாருடன் இருந்தால் பாதுகாப்பாக இருக்கும் என இளைஞர்கள், பெண்கள் தெளிவாக தெரிந்துவைத்துள்ளதாக கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் இன்று (பிப்.7) பேசிய அவர், “இவ்வளவு பெரிய இளைஞர் கூட்டத்தை பார்க்கும்போது, வெற்றி நமது என சொல்ல தோன்றுகிறது. தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்த பாஜகவுடன், கைகோர்த்துக் கொண்டு நமக்கு எதிராக ஒரு கூட்டணி உருவாகியுள்ளது” என விமர்சித்துள்ளார்.