டென்மார்க்கை சேர்ந்த விஞ்ஞானிகள் AI உதவியுடன் பாம்பு விஷ முறிவு மருந்தை உருவாக்கி வருகின்றனர். பாம்பு விஷ நச்சுக்களை திறம்பட நடுநிலையாக்கக்கூடிய புரதங்களை வடிவமைக்க AI-ஐ பயன்படுத்தி வரும் விஞ்ஞானிகள், இதன் மூலம் உலகம் முழுவதும் ஆண்டோன்றுக்கு பாம்பு கடிக்கு ஆளாகும் ஐந்து லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு புதிய நம்பிக்கை ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர். இச்செய்தியை கேட்டு மருத்துவ உலகமே ஆனந்தத்தில் உள்ளது.