பொது இடங்களில் குப்பைகளை வீசும் பொறுப்பற்ற நபர்களைக் கட்டுப்படுத்த, மும்பை மாநகராட்சி ஒரு புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது. இனி நீங்கள் பொது இடங்களில் குப்பைகளை வீசினால், கவனமாக இருப்பது அவசியம். ஏனெனில், மும்பை மாநகராட்சி செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய பிரத்யேகக் கேமராக்களைப் பயன்படுத்தி வருகிறது. அதிநவீன வசதி கொண்ட இந்தக் கேமராக்கள், குப்பைகளை வீசும் நபர்களைக் கண்டறிந்து, அது குறித்து மாநகராட்சி நிர்வாகத்தை அலர்ட் செய்யும். இதன் மூலம் அந்த நபருக்கு அபராதம் விதிக்கப்படும்.