அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ஏர் இந்தியா அறிவித்த ரூ.1 கோடி இழப்பீடை பெறும் செயல்முறை கடுமையாக இருப்பதாக பாதிக்கப்பட்டோர் குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த ஜூன் 12ஆம் தேதி நடந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என டாடா குழுமம் அறிவித்தது. இந்நிலையில், இழப்பீடை பெறும் செயல்முறை கடுமையாக இருப்பதாகவும், விண்ணப்பம் முழுமையாக இல்லையெனில் இழப்பீடு கிடையாது என மிரட்டுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறிவருகின்றனர்.