விவசாயக்கடன் ரத்து: வேளாண் அமைச்சர் வினோத் தகவல்

தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, தமிழகத்தில் விவசாயக் கடன்கள் அனைத்தையும் முதலமைச்சர் தள்ளுபடி செய்வார் என்று வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார். தஞ்சை கும்பகோணத்தில் இன்று (மே 24) செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2028 மகாமகத் திருவிழாவையொட்டி கும்பகோணத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க முதலமைச்சரிடம் வலியுறுத்தப்படும். மேட்டூர் அணை திறப்பு மற்றும் காவிரி தண்ணீர் விவகாரங்களில் முதலமைச்சர் உரிய நல்ல முடிவை எடுப்பார் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி