இந்திய ராணுவம் அக்னிவீர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 01 ஆகும். மொத்தம் 25,000 காலியிடங்கள் உள்ளன. அக்னிவீர் (பொதுப் பணி) பதவிகளுக்கு குறைந்தபட்சம் 45% மதிப்பெண்களுடன் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பதவியைப் பொறுத்து வயது வரம்பு 17 1/2 முதல் 34 வயது வரை. ஆன்லைன் தேர்வுகள் ஜூன் 1 முதல் 15, 2026 வரை நடைபெறும். முழுமையான விவரங்களுக்கு www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.