தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் இளங்கலை பட்ட படிப்புகளில் (UG) சேர்வதற்கான அதிகபட்ச வயது வரம்பு 40 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு நடப்பு கல்வியாண்டிலேயே அமலுக்கு வந்துள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கூடுதலாக 5 ஆண்டுகளும், SC/ ST/ SCA/ BC/ BCM/ MBC/ DNC பிரிவினர் மற்றும் மாணவிகளுக்கு மேலும் 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூடுதல் வயது வரம்பு உயர்வால், பல ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு உயர்கல்வி கற்க விரும்பும் பலர் பயன்பெறுவார்கள்.