ஆப்கானிஸ்தானுக்கு எதிரான வரவிருக்கும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி நாளை மறுநாள் (மே 19) அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், டெஸ்ட் அணியில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பணிச்சுமை காரணமாக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் அதேவேளையில், ஒருநாள் போட்டித் தொடரில் டெல்லி வேகப்பந்து வீச்சாளர் பிரின்ஸ் யாதவ் புதுமுகமாக இடம்பெற அதிக வாய்ப்புள்ளது.