ஆப்கானிஸ்தானின் அமைச்சர் அமீர்கான் முத்தாகி, இன்று (அக்.12) நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் பெண் நிருபர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். அவர் இதற்கு முன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த பின் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், பெண் நிருபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் சர்ச்சை எழுந்த நிலையில், இன்று நடைபெறும் சந்திப்பில் அனைத்து நிருபர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.