திமுக பொதுக்குழு கூட்டத்தில் முகக்கவசம் அணிய அறிவுரை

மதுரையில் நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் முகக்கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. உத்தங்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில், திமுக கூட்டத்திற்கு வரும் 50 வயது கடந்த மூத்த நிர்வாகிகள் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கொரோனா குறித்து அச்சம் தேவையில்லை. முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை. பாதுகாப்புக்காக முகக்கவசம் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி