வெப்பத்தைச் சமாளிக்க நாய் இறைச்சி சூப் குடிக்க அறிவுறுத்தல்

வடகொரியத் தலைநகர் பியாங்யாங் பகுதியில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகக் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. இந்தச் சுட்டெரிக்கும் வெப்பத்தைச் சமாளிப்பதற்காக தர்பூசணி, வெள்ளரி, பாசிப்பயறு போன்ற குளிர்ச்சி தரும் உணவுகளோடு, பாரம்பரிய மருத்துவக் குணம் கொண்டதாகக் கருதப்படும் நாய் இறைச்சி சூப், மீன் கஞ்சி மற்றும் கோழிச் சூப் ஆகியவற்றை அருந்துமாறு அம்மாநில மருத்துவர்கள் மக்களுக்குப் பரிந்துரைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி